Posts

Showing posts from May, 2024

திரைப்பாடங்கள்

Image
சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிப்புப் பற்றி பலரும் நெகிழ்ச்சியோடு பேசுவதைப் பிரமிப்புடன் கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கோ திரைப்படங்கள் மீது தான் ஆர்வம் அதிகம். சமீபத்தில் புத்தக வாசிப்பிலும் மூழ்க ஆரம்பித்துள்ளேன். ஏனோ, திரைப்படங்கள் வெறும் கேளிக்கையாக மட்டுமே பெரிதும் நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படங்கள் அதற்கானது மட்டும் இல்லை; அது பார்ப்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு அப்படியே கடந்து செல்ல முடியவில்லை. அவை, எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகின்றன; ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன; இப்படி சிலாகித்துப் பேசிக் கொண்டே போகலாம். குறிப்பாக, திரைப்பாடல்கள் கூறும் தத்துவங்களும், கற்றுத்தரும் பாடங்களும் தனிச்சிறப்பு. அப்படி திரைப்பாடல்களில் இருந்து கற்கும் பாடங்களைப் பற்றிய இத்தொகுப்பே - "திரைப்பாடங்கள்" திரைப்பாடல்களைப் பற்றிப் பேசும் பொழுது சமீப காலமாக பாடல்களில் இசை பெரிதா? வரிகள் பெரிதா? என்னும் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றைத் தாழ்த்தி மற்றொன்றை உயர்த்தி மாரு தட்டிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. சரி, நமக்கு ஏன...