Posts

Showing posts from March, 2024

ஒரு நிகழ்வு பல கேள்விகள்

அனைவருக்கும் வணக்கம்!! சமீபத்தில் நான் மேற்கொண்ட  பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பின் பல்வேறு கேள்விகள் எனக்கு எழுந்தன. அதை அசைபோடுவது மட்டுமின்றி இங்கே பதிவிட்டால் இன்னும் பல விடயங்கள் புலப்படும் என்று நம்புகிறேன். சென்ற வாரம் நான் நண்பர்களுடன் உத்தர்காண்ட் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்று வந்தேன். அதில் குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஹரித்வாரைச் சுற்றிப் பார்த்தோம்.  அன்றைய நாள் முழுக்கக் கோவில் மயமாகவே இருந்தது. இளைஞர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலாவில் கோவில் கோவிலாகச் சுற்றுவீர்களா எனச் சிலர் நகைத்ததும் உண்டு. நாங்கள் என்ன மஞ்ஞுமல் பாய்ஸா?  நாங்கள் மலைக்கோயில் பாய்ஸ்.. அன்றொரு நாள் முழுவதும் சில மலைகள் ஏறி இறங்கி இறைவனை வழிபட்ட வண்ணம் இருந்தோம் . சரி இந்த நிகழ்வில் என்ன கேள்விகள் என்றா கேட்கிறீர்கள். ஒன்றல்ல; பல.  நாங்கள் காலை முழுவதும் மூன்று கோவில்களுக்குச் சென்றோம்; மானசா தேவி, மாயா தேவி, சண்டி தேவி, அஞ்சனி தேவி ஆகியோரை வழிபட. இவை அங்கு மிகவும் பிரசித்திபெற்ற கோயில்கள். மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மலை ஏறி இறங்க சில கோயில்களில் படிக்கட்டுகள் இருந்...

ஆட்டம் ஆரம்பம்

 வெளி தோற்றத்திற்கு ஓர் அழகான குட்டை போல் இருந்தாலும் உள்ளே பல அழுக்குகளும் பாசிகளும் படிந்தே இருந்தன. அந்த குட்டை வேறு ஒன்றும் இல்லை என் ஆழ்மனம் தான். உள்ளே பல குமுறல்களும், கோபங்களும், கனவுகளும், கடந்த கால நினைவுகளும் இருந்தாலும், வெளியே ஏனோ ஓர் வெளுப்புச் சாயம் பூசிக்கொண்டது போல் இருந்தது. அந்தக் குட்டை தன் நிலை அறிய அடிக்கடி கல் வீசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். அப்படி என் நிலை அறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது "வேட்கையோடு விளையாடு" எனும் புத்தகத்தில் உள்ள ஓர் கட்டுரை வாசிப்பும், அந்தப் புத்தகத்தின் எழுத்தாளரான ஈரோடு கதிர் அவர்களுடனான உரையாடலும்.   அதில் அவர் குறிப்பிட்டுள்ள லட்சியம், கனவு, ஆசை, நோக்கம், விருப்பம் பற்றிய புரிதல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. பல கனவுகள் இருப்பினும், அதற்கான தேடலோ மெனக்கெடலோ, ஏன் ஓர் முதல் அடியே இன்னும் நாம் எடுத்து வைக்கவில்லை என்று தோன்றிய தருணம் ஓர் சவுக்கடி போல் இருந்தது. பொதுவாகவே நான் ஓர் குற்றச்சாட்டு வைப்பதுண்டு .  எனக்கு இந்த இருபத்து நான்கு மணி நேரம் போதவே இல்லையே. கூடுதல் நேரம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கு...